< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2024 3:59 AM IST

மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வாலிபர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வேலூர்,

வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 19) என்பவர் மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்