< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
|3 Oct 2023 12:15 AM IST
முத்துப்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி தெற்கு பள்ளியமேடு கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் அருள் (வயது 24) என்பவர் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் முத்துப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் போலீசார் அருளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.