< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது
|2 Oct 2023 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த வசீகரன் (வயது 21), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த முகமது யாசிக் (20) ஆகியோர் அங்கு பணியில் ஈடுபட்டு வரும் 2 வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் லட்சுமணசாமி அளித்த புகாரின் பேரில் வசீகரனை போலீசார் கைது செய்தனர்.