< Back
மாநில செய்திகள்
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் மிண்டும் ரகளை - போலீசார் குவிப்பு
மாநில செய்திகள்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் மிண்டும் ரகளை - போலீசார் குவிப்பு

தினத்தந்தி
|
28 March 2023 5:30 PM IST

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு அங்குள்ள 6 சிறார்கள் தப்பியோடியதாகவும், இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அதே பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் இன்று ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள 14 சிறார்கள் மீது பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு இல்லத்தில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்