< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
|10 Sept 2024 8:27 AM IST
தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க. மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் பறிப்பதற்காக ராதாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சென்றார்.
அப்போது அங்கு சென்ற செல்வகுமார், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர். தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.