கள்ளக்குறிச்சி
கள்ளக்காதலனுடன் இளம் பெண் ஓட்டம்
|4-வயது மகனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம் பெண் ஓட்டம் போலீசார் விசாரணை
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் புக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி சிவசங்கரி(வயது 26). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஜீவித்(4) என்ற மகன் உள்ளான். ஏழுமலை கடந்த ஓராண்டுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுவிட்டார். இதனால் சிவசங்கரி மகனுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சிவசங்கரி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கோவிந்தன்(45) பல்வேறு இடங்களில் தேடியும் மகளை காணாததால் இது குறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் வேறொரு தொலைபேசி எண்ணில் இருந்து என்னை தொடர்பு கொண்டு நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளேன். என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாள் என தெரிவித்துள்ளார்.
இதனால் 4 வயது மகனை தவிக்க விட்டு சிவசங்கரி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவசங்கரியை தேடி வருகின்றனர்.