ராணிப்பேட்டை
இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட சிறப்பு பயிற்சி
|இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட சிறப்பு பயிற்சி தொடக்க விழா கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் நடந்தது.
ராணிப்பேட்டை
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான இளம் மாணவர் விஞ்ஞானி திட்டத்தின் 15 நாள் சிறப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் தலைமை தாங்கினார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நா.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும், மாணவர்களுக்கு அறிவியலின் தாக்கம், இன்றியமையாமை குறித்தும் பேசினார். விழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை பேராசிரியை மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். முடிவில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ம.விக்ரமாதித்தன் நன்றி கூறினார்.