< Back
மாநில செய்திகள்
இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2022 12:37 AM IST

இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஆல்பர்ட் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள், செம்பு பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போனதாக பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே இரும்பு கடையில் வேலை பார்த்த நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் கணேசன் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்