பிளஸ்-1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண் போக்சோவில் கைது
|இவருடைய கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர், பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவருடைய பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண், தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார்.
அந்த இளம்பெண்ணும், பிளஸ்-1 மாணவரும் உறவினர்கள் ஆவர். எனவே ஒருவரது வீட்டுக்கு இன்னொருவர் செல்வதை யாரும் தவறாக நினைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில நாட்களாக அந்த மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சோர்வாக இருந்துள்ளார். யாரிடமும் சரிவர பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், அதுகுறித்து மாணவரிடம் கேட்டுள்ளனர். அப்ேபாது மாணவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர், உறவினரான அந்த இளம்பெண் கடந்த 3 மாதமாக தன்னை மிரட்டி பாலியல் உறவு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
எனவே மாணவரின் பெற்றோர், இதுதொடர்பாக மானாமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.