திருப்பூர்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கணபதிநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகள் தேவகி (வயது 25). இவர் காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார். அதன்பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் தேவகியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அவருக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையாம். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவகி பெற்றோருடன் கோபித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் தேவகியின் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தேவகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.