ஒடிசாவில் கூட்டு பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை..!
|பெண்ணை பலாத்காரம் செய்து கோடரியால் வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சில திடுக்கிடும் தகவல்கள் இதில் வெளியாகின. அதாவது ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனையறிந்த அவரது அக்கா வாலிபரை தட்டிக்கேட்டார். இதனால் அவர் மீது அந்த வாலிபர் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு இருவரும் மாடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தனது அக்காவை இவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் கோடரியால் வெட்டி கொன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. எனவே அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.