< Back
மாநில செய்திகள்
குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
8 April 2023 2:05 PM IST

குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்ன காஞ்சீபுரம் டோல்கேட், கோகுலம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சத்யா (வயது21). இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.

இவர்களுடைய மகன் அகிலன் (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. பாலகிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தன்னுடைய தாயார் காமாட்சி வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்ற சத்யா, குழந்தை அகிலனை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.

தொடர்ந்து இரவு 11 மணியளவில் காமாட்சியின் வீட்டுக்கு சென்ற பாலகிருஷ்ணன் மனைவி சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்