< Back
மாநில செய்திகள்
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
15 Feb 2023 5:37 PM IST

கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றாள் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்படடு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்ணெண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்