கன்னியாகுமரி
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
|இரணியல் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
இளம்பெண்
இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அருள்சாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.
சாவு
இந்தநிலையில் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் மதியம் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் மதுகுடிப்பதை நிறுத்தாததால் பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.