< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
செங்குன்றம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
|7 Aug 2023 3:33 PM IST
செங்குன்றம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகரை சேர்ந்தவர் முரளி வசந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரீத்தி(வயது 30). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடந்த பிரீத்தி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் பிரீத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.