கன்னியாகுமரி
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
|பூதப்பாண்டி அருேக குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருேக குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்ப தகராறு
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அம்பலம்திருத்தி பகுதியை சேர்ந்தவர் லெகஞ்சன், டெம்போ டிரைவர். இவரது மனைவி ராமேஸ்வரி (வயது34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று அவர்கள் இடைேய மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமேஸ்வரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பரிதாப சாவு
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராமேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.