< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|27 July 2022 9:34 PM IST
பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ஜெரின் (வயது 24). இவர் நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ஜெரின் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.