< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்; சிறப்பு சலுகை அறிவிப்பு
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்; சிறப்பு சலுகை அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Nov 2023 9:53 PM IST

பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாள் டிசம்பர் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி க்யூ ஆர் கோடு மூலம் பயண சீட்டு வாங்கும் பயணிகளுக்கு ரூ.5 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவு கூரும் வகையிலும், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டை ஊக்குவிக்கவும் இந்த சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை டிசம்பர் 3-ந் தேதி மட்டுமே வழங்கப்படுகிறது. பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

மேலும் செய்திகள்