< Back
மாநில செய்திகள்
வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
மாநில செய்திகள்

வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Nov 2023 8:30 AM IST

வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

சென்னை,

தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீர தீரச் செயல்களுக்கான "அண்ணா பதக்கம்" வரும் 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும். எனவே, இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட 'https://awards.tn.gov.in/' என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.

விருதுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்