< Back
மாநில செய்திகள்
பி.பார்ம், நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாநில செய்திகள்

பி.பார்ம், நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
1 Aug 2022 8:05 AM IST

நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்