< Back
மாநில செய்திகள்
நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை, பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை - அண்ணாமலை மீது  காயத்ரி ரகுராம் விமர்சனம்
மாநில செய்திகள்

நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை, பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை - அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் விமர்சனம்

தினத்தந்தி
|
8 March 2023 4:01 PM IST

டெல்லி மற்றும் ஆர்எஸ்எஸ் அனுமதி இல்லாமல் கட்சியில் யாரையும் நியமிக்க முடியாது டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேச முடியாது என்பதை அண்ணாமலை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

சென்னை,

பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார். அதேபோல் பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

இந்தசூழ்நிலையில், அண்ணாமலை நேற்று தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.

எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும்.

நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அதற்காக நான் பயப்பட மாட்டேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன்.

பாஜக செட்டில் ஆகும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவில்,

அண்ணாமலை நீங்கள் யாரையும் மேனேஜர் ஆகவோ அல்லது தலைவராகவோ ஆக்கத் தேவையில்லை, அனைவரும் சுயமாக உருவாக்கப்பட்டவர்கள். உனக்கு ஜல்ட்ரா அடிக்க யாரேனும் தலைவராக உருவாக்க தேவை இல்லை. முதலில் சென்று சாவடி வேலை, களப்பணி, தமிழகத்தின் அடிமட்டத்தை அடையுங்கள். டெல்லி அனுமதியோ ஆர்எஸ்எஸ் அனுமதியோ இல்லாமல் கழுதையை கூட நியமிக்க முடியாது.

டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேசவோ முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டெல்லி உங்களைப் பார்த்து பயப்படுவது போல் பேசுவது, தமிழ் செய்தி சேனல்களில் நீங்கள் டெல்லி பார்த்து பயப்படாமல் தமிழில் பின்னால் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் நீங்கள் அதே விஷயம் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?

மேலும் 20-30 வருடங்களாக கட்சியில் பணியாற்றியவர்களை உங்கள் சேறு என்று கருத்து சொல்வது முட்டாள்தனமான விஷயம். மோடி ஜி மற்றும் அமித்ஷா ஜி மற்றும் பி.எல்.சந்தோஷ் ஜி 30 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார் அவர்களை ஒரு சேற்று என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தமிழ்நாடு, தேசம் மற்றும் பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்