< Back
மாநில செய்திகள்
கைதிகளுக்கு யோகா பயிற்சி
வேலூர்
மாநில செய்திகள்

கைதிகளுக்கு யோகா பயிற்சி

தினத்தந்தி
|
6 Jun 2022 10:59 PM IST

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் ஜெயிலில் யோகா சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது. சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், சூப்பிரண்டு அப்துல் ரகுமான் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுஜாதா கலந்து கொண்டார்.

இதில் ஏராளமான கைதிகளுக்கு யோகா குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் டாக்டர் பிரகாஷ்அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பெண்கள் ஜெயிலிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்