< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் யோகா பயிற்சி முகாம்
|10 Aug 2023 4:18 AM IST
முனைஞ்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுஷ் சித்த மருத்துவம் மூலம் யோகா வகுப்பு தொடங்கி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கிதுரை தொடங்கி வைத்தார். சித்த மருத்துவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைதெரஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுனர் மகாராஜன் திருமூலர் யோகாசனம் மற்றும் பிராணாயாமம் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மனோகர் செய்திருந்தார்.