< Back
மாநில செய்திகள்
யோகா பயிற்சி முகாம்
கரூர்
மாநில செய்திகள்

யோகா பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
26 Jun 2022 12:17 AM IST

யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் மனவளக்கலை யோகா பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஆழியார் துணைத்தலைவரும், சேலம் மண்டலத்தலைவருமான முதுநிலை பேராசிரியர் உழவன் தங்கவேல் கலந்து கொண்டு முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். முதல் நிலை பயிற்சி முடிக்காதவர்கள் இன்று முதல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வருகிற 30-ந்தேதி வரை தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

Related Tags :
மேலும் செய்திகள்