சிவகங்கை
அரசு பள்ளி, ரெயில் நிலையத்தில் யோகா பயிற்சி
|சர்வதேச யோகா தினத்தையொட்டி காரைக்குடியில் அரசு பள்ளி மற்றும் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள், போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
சர்வதேச யோகா தினத்தையொட்டி காரைக்குடியில் அரசு பள்ளி மற்றும் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள், போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினம்
நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ரெயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு அலுவலர்கள், போலீசார் ஆகியோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பிரிட்டோ தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் யோகா பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், முதுகலை ஆசிரியர் ஜான்குழந்தை மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி ரெயில் நிலையம்
இதேபோல் காரைக்குடி ரெயில் நிலையத்தில் மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். இவர்களுக்கு மத்திய ரெயில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் செல்வராஜ் யோகா பயிற்சியை வழங்கினார்.