< Back
மாநில செய்திகள்
பிணமாக மிதந்த யோகா ஆசிரியர்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பிணமாக மிதந்த யோகா ஆசிரியர்

தினத்தந்தி
|
9 Oct 2023 2:00 AM IST

ஆழியாறு அணையில் யோகா ஆசிரியர் பிணமாக மிதந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அணையில் பிணமாக மிதந்தது ஆழியாறு தென்றல் நகரை சேர்ந்த யோகா ஆசிரியர் விஸ்வநாதன்(வயது 45) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்