< Back
மாநில செய்திகள்
யோகா பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

யோகா பயிற்சி

தினத்தந்தி
|
21 July 2022 5:50 PM GMT

யோகா பயிற்சி நடைபெற்றது.

நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியர் சரஸ்வதி சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் குறுக்குச்சாலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

மேலும் செய்திகள்