< Back
மாநில செய்திகள்
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க யோகா உதவும்-கருத்தரங்கில் தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க யோகா உதவும்-கருத்தரங்கில் தகவல்

தினத்தந்தி
|
2 Jun 2022 12:30 AM IST

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க யோகா உதவும்-கருத்தரங்கில் தகவல்

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா கல்வி மையத்தில் யோகா படிப்பின் இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விடைபெறும் விழா மற்றும் யோகா குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உடலையும், மனதையும் எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்க அனைவருக்கும் யோகா பயிற்சி மிகவும் அவசியம். ஞாபகசக்தி, செயல்திறன் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்தி உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா உதவுகிறது. நாம் தினமும் யோகா பயிற்சி செய்து வந்தால் வாழ்க்கையை சிறப்பாக உருவாக்கிக் கொள்வதற்கு தேவையான அனைத்து ஆற்றலையும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய ஒருங்கிணைப்பாளர் சரோஜா, உதவி பேராசிரியர் தன்ராஜ், பல்கலைக்கழக மருத்துவர் ஆனந்தி, யோகா பயிற்றுனர் வாசுதேவன், பயிற்சி பெறும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் யோகா மைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்