விருதுநகர்
கல்லூரிகளில் யோகா தினம்
|சர்வதேச யோகா தினம் உடற்கல்வித்துறை சார்பில் நடைெபற்றது.
சிவகாசி,
சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் சர்வதேச யோகா தினம் உடற்கல்வித்துறை சார்பில் நடைெபற்றது. கல்லூரி முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் விஜய குமாரி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகாசி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மணிமேகலா கலந்து கொண்டு யோகாவின் சிறப்புகள் குறித்து பேசினார். யோகா ஆசிரியை மணிமாலா யோகா பயிற்சிகளை மாணவிகளுக்கு வழங்கினார். முடிவில் உதவி உடற்கல்வி இயக்குனர் சசிபிரியா நன்றி கூறினார். இதேபோல் சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குனர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி வழங்கினார். முடிவில் மாரிச்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் துர்கேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.