< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
பள்ளியில் யோகா தினம்
|22 Jun 2023 12:30 AM IST
வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் யோகா தினம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு அருகில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு யோகா நிகழ்ச்சிகளை தொடங்கினர். இயன்முறை மருத்துவர் புனிதா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் கு.தவமணி தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சங்கரசுப்பிரமணியன் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆ.சாந்தி, சு.ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, ஆயா கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.