< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் யோகா தினம்
|21 Jun 2022 11:35 PM IST
கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், சர்வதேச யோக தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் தலைமை தாங்கி, வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு யோகா கலை செயல்விளக்க வீரர் க.பரசுராமன் கலந்துகொண்டு பல்வேறு யோகா கலைகள் செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் ச.சதீஷ் நன்றி கூறினார்.