< Back
மாநில செய்திகள்
பருத்தியில் மகசூல் குறைவு
விருதுநகர்
மாநில செய்திகள்

பருத்தியில் மகசூல் குறைவு

தினத்தந்தி
|
16 Jun 2022 12:37 AM IST

ஆலங்குளம் பகுதியில் பருத்தியில் மகசூல் குறைந்தது. விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் பருத்தியில் மகசூல் குறைந்தது. விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

ஆலங்குளம், கோபாலபுரம் புளியடிபட்டி, ஏ.லட்சுமி புரம், கீழாண்மறைநாடு, மேலாண்மறைநாடு, வலையபட்டி, அப்பயநாயக்கர்பட்டி, தொம்ப குளம், கரிசல்குளம், கொங்கன்குளம், கல்லமநாயக்கர் பட்டி, உப்புபட்டி, எதிர்கோட்டை, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு 300 ஏக்கர் வரை கோடை பருத்தி சாகுபடி செய்யபட்டு உள்ளது. மாசி மாதம் சாகுபடி செய்யபட்ட பருத்தி இப்போது வெடித்து உள்ளது.

மகசூல் குறைவு

கோடை பருத்தியானது கிணற்று பாசனம் உள்ள நிலத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. பருத்தி வெடித்து விவசாயிகளால் காட்டில்உள்ள பருத்தியை எடுத்து வியாபாரிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 8 குவிண்டால் வரை விளைச்சல் இருந்தது. இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் வரைதான் மகசூல் கிடைத்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 11,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 8,300 முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பருத்தி மகசூலும் குைறந்து, விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வாழ்வாதாரம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதியில் பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி வெடிக்கும் தருவாயில் உள்ளது.

ஆனால் இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கவில்லை. விலையும் இல்லை. எனவே நாங்கள் சாகுபடி செய்த பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எங்களின் வாழ்வாதாரம் ஓரளவிற்கு பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்