< Back
மாநில செய்திகள்
பருத்தியில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

பருத்தியில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு

தினத்தந்தி
|
27 Dec 2022 1:17 AM IST

ஆலங்குளம் பகுதியில் பருத்தியில் நோய் தாக்குதலால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் பருத்தியில் நோய் தாக்குதலால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடி

ஆலங்குளம், தொம்பகுளம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, அருணாசலபுரம், கோட்டைபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம் புளியடிபட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, காக்கிவாடன்பட்டி, உப்புபட்டி, மாதாங்கோவில்பட்டி, எதிர்கோட்டை, எட்டாக்காபட்டி இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பருத்தி செடிகளில் வைரஸ் நோய் பரவி இலைகள் உதிர்ந்து வருகின்றது. இதனால் செடிகளில் மீண்டும் காய் கட்டாமல் போய் விடுகின்றது.

மகசூல் பாதிப்பு

நோய் தாக்குதலால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டால் பருத்தி வரும். தற்போது நோய் தாக்குதலால் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் தான் மகசூல் கிடைக்கிறது.

அதேபோல நல்ல விளைந்த பருத்தி ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது ரூ.6,500-க்கு தான் விற்பனையாகிறது. விளைச்சலும் இல்லை, விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பருத்தியை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் திறக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்