நாமக்கல்
நாமகிரிப்பேட்டையில்ரூ.67 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
|ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.
இதில் விரலி ரகம் 1,050 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 839-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 634-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 329-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 699-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 302-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 965-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1,600 மஞ்சள் மூட்டைகள் ரூ.67 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.