< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
|26 March 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. ஏலத்தில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 89 முதல் ரூ.8 ஆயிரத்து 229 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 689 முதல் ரூ.6 ஆயிரத்து 369 வரையிலும், பனங்காலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 122 முதல் ரூ.11 ஆயிரத்து 429 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 4 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.