< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ரூ.13 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
|16 Oct 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.13 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 265 முதல் ரூ.14 ஆயிரத்து 310 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 895 முதல் ரூ.12 ஆயிரத்து 210 வரையிலும் விலை போனது. மொத்தம் 250 மஞ்சள் மூட்டைகள் ரூ.13 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.