< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில் ரூ.1.30 கோடிக்கு மஞ்சள் ஏலம்
|30 July 2023 12:15 AM IST
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 724 முதல் ரூ.14 ஆயிரத்து 759 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 686 முதல் ரூ.13 ஆயிரத்து 269 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 479 முதல் ரூ.13 ஆயிரத்து 109 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.