< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - திருமாவளவன்
மாநில செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - திருமாவளவன்

தினத்தந்தி
|
2 July 2022 8:33 AM IST

ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோர் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று எம்.பி திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்ட திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்