< Back
மாநில செய்திகள்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர்
மாநில செய்திகள்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினத்தந்தி
|
29 May 2022 10:19 PM GMT

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனுப்பர்பாளையம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாநகர் 2-வது மண்டலக்குழுவின் 4-வது மாநாடு நேற்று திருப்பூர்அப்பாச்சி நகரில் நடைபெற்றது. கட்சி மூத்த நிர்வாகி துரைசாமி மாநாட்டு கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் ரவி, மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

மாநாட்டில் 15 பேர் கொண்ட புதிய இடைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி சசிகுமார் செயலாளராகவும், முத்துப்பாண்டி துணை செயலாளராகவும், கவுன்சிலர் ராஜேந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

நடவடிக்கை

திருப்பூர் வடக்கு தொகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை உயர்வால் பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்