< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையா? மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...
மாநில செய்திகள்

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையா? மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...

தினத்தந்தி
|
13 Feb 2023 8:57 PM IST

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாறசாலை,

தமிழக கேரள எல்லையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த உறவினர்கள் 6 பேர் மருத்துவமனையில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்