< Back
மாநில செய்திகள்
சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரம்
மாநில செய்திகள்

சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 15,670 பேர் எழுதுகின்றனர்

விழுப்புரம்

எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை எழுதுவதற்காக 15,670 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையொட்டி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் துறையின் தலைவரால் நேற்று மாலை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி கூட்டம் நடைபெற்றது.

வழிகாட்டுதல்கள்

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தேர்வு நடத்தப்படும் முறைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அதாவது தேர்வு எழுத வரும் நபர்கள் தனக்கான ஹால் டிக்கெட், பந்துமுனை பேனா, அடையாள அட்டை, தேர்வு எழுதுவதற்கான அட்டை ஆகியவற்றை தவிர செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை. மேலும் தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 8 மணிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்