< Back
மாநில செய்திகள்
கடலூர் மாவட்டத்தில்    கிராம உதவியாளர் பணிக்கு நாளை மறுநாள் எழுத்து தேர்வு    12,510 பேர் எழுதுகிறார்கள்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நாளை மறுநாள் எழுத்து தேர்வு 12,510 பேர் எழுதுகிறார்கள்

தினத்தந்தி
|
2 Dec 2022 12:15 AM IST

கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 12,510 பேர் எழுத உள்ளனர்.

கிராம உதவியாளர் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாவட்டத்தில் 12,510 பேர் எழுத உள்ளனர். இதற்காக 19 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கடலூா் மஞ்சக்குப்பம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி ஸ்ரீசுப்புராய செட்டியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுத்தையா் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, டைமண்ட் ஜூப்லி கட்டிடம், பிளாட்டினம் ஜூப்லி கட்டிடம், கோல்டன் ஜூப்லி கட்டிடம், சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி, விருத்தாசலம் குப்பநத்தம் ஸ்ரீவிருத்தாம்பிகை தொழிற்பயிற்சி நிலையம், பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியவடவாடி டாக்டர் எஸ்.ராமதாஸ் கலைக்கல்லூரி, வேப்பூர் தாலுகா திருப்பயர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி தாலுகா எடச்செருவாய் அன்னை மாதா பாலிடெக்னிக் கல்லூரி, பெருமுளை ஸ்ரீஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் டி.வி.சி. மேல்நிலைப்பள்ளி, புவனகிரி மங்கலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

இணையவழி மூலம் விண்ணப்பித்த அனைவரும் எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டினை, தங்கள் விண்ணப்ப பதிவெண்ணை பயன்படுத்தி https://agaram.tn.gov.in/என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி இல்லை

விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.50 மணி வரை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலை 9.50 மணிக்கு பிறகு தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அனைவரும் காலை 9.45 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் சென்று, காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

அதற்காக தேர்வர்கள் முன்கூட்டியே தாங்கள் தேர்வு எழுத உள்ள மையத்தின் முகவரியை அறிந்து, குறித்த நேரத்திற்குள் சென்று சேரும் வகையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் அளிக்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்