< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில்சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது

தினத்தந்தி
|
7 May 2023 6:18 PM GMT

நாகர்கோவிலில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

சாலை ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பொறியியல் சார் நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர்களுக்கான 761 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதாவது கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் 300 பேரும், டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் 300 பேரும், சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 300 பேரும், ஆதர்ஷ் வித்யா கேந்திராவில் 240 பேரும், டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 255 பேரும் என மொத்தம் 1,395 பேர் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்புக்குழு

அதன்படி நாகர்கோவிலில் உள்ள 5 தேர்வு மையங்களிலும் நேற்று காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக தேர்வுகள் நடந்தது. காலையில் நடந்த தேர்வில் 816 பேர் எழுதினர். 579 பேர் தேர்வு எழுதவில்லை. இதேபோல மதியம் நடந்த தேர்வை 812 பேர் எழுதினர். 583 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பு தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையங்களில் தோ்வாளர்களை கண்காணிக்க நடமாடும் கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். மேலும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்