< Back
மாநில செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது
மாநில செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
25 Jun 2022 6:57 AM IST

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வானது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெறுகிறது.

காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனியாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெறுகிறது. 2 லட்சத்து 22 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

43 திருநங்கைகள் தேர்வு எழுத அழைக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமாஅகர்வால், ஐ.ஜி.செந்தில்குமாரி, சூப்பிரண்டு தம்பிதுரை ஆகியோர் இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்

மேலும் செய்திகள்