மத்திய மந்திரி அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!
|மத்திய மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ்பூஷண் சரன்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ்பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரன்சிங் கைது செய்யப்படவில்லை.
அதேவேளையில் பிரிஜ்பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், பிரிஜ்பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் தற்போது சந்தித்து பேசி வருகின்றனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயி தலைவர் ராகேஷ் திகாயித் டெல்லியில் உள்ள மத்திய மந்திரிஅனுராக் தாக்கூரின் இல்லத்திற்கு நேரில் சந்தித்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Delhi | Wrestler Sakshee Malikkh arrives at the residence of Union Sports Minister Anurag Thakur after an invitation from the government for talks with protesting wrestlers pic.twitter.com/iiOKQH5Y8v
— ANI (@ANI) June 7, 2023