< Back
மாநில செய்திகள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
நீலகிரி
மாநில செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தினத்தந்தி
|
15 Oct 2023 1:00 AM IST

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடந்தது.

மகாளய அமாவாசையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நேற்று வழிபாடு செய்யப்பட்டது. ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் தர்ப்பண நிகழ்ச்சி நடந்தது. அப்போது வேத மந்திரங்கள் ஓத, எள்ளுநீர் தெளித்து முன்னோர்களை பொதுமக்கள் வழிபட்டனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஊட்டி லோயர் பஜாரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், காந்தல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் சிலர் வீடுகளிலும் தங்களது முன்னோர்களின் புகைப்படங்களை வைத்து பூஜை செய்து, பித்ருக்களின் நினைவாக காக்கைகளுக்கு உணவளித்தனர். முன்னதாக கடந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால், இந்த 2 வாரமும் பொதுமக்கள் சுபகாரியங்களில் ஈடுபடவில்லை. மகாளய அமாவாசையை முன்னிட்டு கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், டானிங்டன் கரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்