< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
பருவமழை செழிக்க வேண்டிகாவிரி ஆற்றில் வழிபாடு
|15 Oct 2023 1:53 AM IST
தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பாலாறில் பருவமழை செழிக்க வேண்டி காவிரி ஆற்றில் வழிபாடு நடந்தது.
மேட்டூர்
பருவமழை செழிக்க வேண்டி தமிழக, கர்நாடக எல்லை பகுதியான பாலாறு காவிரி அன்னைக்கு 18 வகையான அபிஷேகம், கற்பூர ஆரத்தி வழிபாடு நடத்தினர். கோவிந்தபாடி அய்யப்ப சேவா சங்கம், ஓம்சக்தி பீடம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பாலாறில் பருவமழை செழிக்கவும், உலக மக்கள் அனைவரும் நலம்பெறவும் கால்நடைகள் நலம் பெறவும் யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காவிரி அன்னைக்கு மஞ்சள், குங்குமம், இளநீர், பால், தயிர் உள்பட 18 வகையான அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கற்பூர ஆரத்தி எடுத்து காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மடாதிபதி மல்லிகாஜூன் சாமிகள் தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.