< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
காவிரியில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு
|25 Nov 2022 2:32 AM IST
காவிரியில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது.
கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக அய்யப்ப சுவாமிக்கு காவிரியில் ஆராட்டு நடைபெற்றது. இதில் முருங்கப்போட்டை அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் சபரிமலையில் நடைபெறும் முறைப்படி அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு, சிறப்பு பூஜையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சரண கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.