< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பள்ளி சத்துணவு கூடத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியில் புழுக்கள்
|21 Jan 2023 12:00 AM IST
பள்ளி சத்துணவு கூடத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியில் புழுக்கள் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புகழூர் தாலுகா திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு பயன்படுத்தப்படும் மதிய உணவு தயாரிப்பதற்காக சத்துணவு கூடத்தில் சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் ஏராளமான புழுக்களும், செல்களும் ஊறுகின்றன. இதைப் பார்த்த மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இது குறித்துகடும் நடவடிக்கை வேண்டும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.