ஈஷா யோகா மையத்தில் களைகட்டிய உலக யோகா தின விழா
|கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
கோவை,
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, INS அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப் மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.